“ஸ்டாலின் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் திமுக எதிர்க்கட்சியாக கூட இருக்காது”கடம்பூர் ராஜு

“ஸ்டாலின் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் திமுக எதிர்க்கட்சியாக கூட இருக்காது”கடம்பூர் ராஜு
“ஸ்டாலின் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் திமுக எதிர்க்கட்சியாக கூட இருக்காது”கடம்பூர் ராஜு
Published on

பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாக அரசு தடையாக இருக்காது என திரையரங்குகள் திறப்பு பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு சூசகமாக தகவல் அளித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில்...

எதிர்க்கட்சி அரசியல் செய்யமால் அவியலா செய்யுமா என்று மு.க.ஸ்டாலின் கூறியதில் இருந்து எதிர்க்கட்சி என்றால் எல்லா பிரச்னையிலும் அரசியல் தான் செய்யும் என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். அரசியல் செய்வதற்கு எவ்வளவோ வழி உள்ளது. அதனை விட்டு அரசு திட்டங்களை குற்றம் குறை சொல்வது தனது வாடிக்கை என்பதனை மு.க.ஸ்டாலின் ஒத்துக்கொண்டுள்ளார். 


எதிர்க்கட்சி என்றால் நாணயத்தின் இருபக்கம் போன்று செயல்பட வெண்டும் என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். எதிர்க்கட்சிக்கான உரிமை மற்றும் கடமையை அண்ணா தெளிவாக கூறியுள்ளார். ஆனால் அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறும் மு.க.ஸ்டாலின் அண்ணாவின் கொள்கைகளை எவ்வளது தூரம் கடைபிடிப்பார் என்பது நமக்கு தெரியும். மு.க.ஸ்டாலின் பற்றி மக்கள் எடைபோடுவதற்கு இது போன்று இன்னும் சில கருத்துகள் சொன்னால் போதும். திமுக எதிர்க்கட்சிக்கு கூட லாயக்கில்லை என்று வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட மக்கள் வழங்க மாட்டார்கள்.

2011-ல் திமுக எதிர்க்கட்சியாக கூட வரவில்லை. அதே போன்று 2021லும் திமுக எதிர்க்கட்சியாக வரமால் இருக்க இது போன்று கருத்துகளை மு.க.ஸ்டாலின் கூறினால்போதும். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வர எளிதாக இருக்கும். திரையரங்குகளை திறக்க நாங்களும் ஆவலோடு இருக்கிறோம். திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பதில் அரசுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வரும் 28ஆம் தேதி முதல்வர் ஆய்வு கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்துவார்.

சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஏ.சி. இல்லமால் பயன்படுத்த முடியாது. மக்களும் அதனை விரும்பமாட்டார்கள். இது போன்ற பல்வேறு தர்மசங்கடமான சூழ்நிலைகள் உள்ளது. இதையெல்லாம் தெளிவுபடுத்தி விட்டு திரையரங்குகளை திறக்க வேண்டும். அதே நேரத்தில் மக்கள் ஒருவர் கூட பாதிக்கக்கூடாது என்பதில் முதல்வர் தெளிவாக உள்ளார். விரைவில் நல்ல முடிவு வரும். பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்று ரசிகர்களும், மக்களும் ஆர்வமாக இருப்பார்கள். அதற்கு தடையாக அரசு இருக்காது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com