ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரட்டும், அப்போது அதனை எதிர்கொள்ள அரசு தயார் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் எப்படியாவது முதல்வராகிவிட வேண்டுமென ஆசையில் ஸ்டாலின் இருக்கிறார் என்று விமர்சித்தார். மேலும், “அரசியல் அமைப்பு சட்டப்படியே கவர்னர் செயல்பட முடியும். அறுதி பெரும்பான்மை கொண்ட அரசாக ஜெயலலிதா அரசு உள்ளது. அதிமுக கட்சியின் விதிகளின் படியே பொதுக்குழு கூடுகிறது. உறுப்பினர் அனைவரும் பங்கேற்பர்” என்றார்.
முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.