''மறுபிறவி இருந்தால் கலாஷேத்ராவில் மாணவராக வேண்டும்'' - நிர்மலா சீதாராமன்

''மறுபிறவி இருந்தால் கலாஷேத்ராவில் மாணவராக வேண்டும்'' - நிர்மலா சீதாராமன்

''மறுபிறவி இருந்தால் கலாஷேத்ராவில் மாணவராக வேண்டும்'' - நிர்மலா சீதாராமன்
Published on

மீண்டும் ஒரு பிறவி இருந்தால் கலாஷேத்ராவில் மாணவராக இருக்க வேண்டும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்திராவில் அதை உருவாக்கிய ருக்மணி தேவி மற்றும் கலாஷேத்திராவின் முதல் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிறப்புகளை எடுத்துக் கூறும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கொரோனா காலத்தில் மக்களை உற்சாகப்படுத்தும் கலைஞர்கள்., பல்வேறு வழிகளில் மக்களை சந்தோச படுத்தியதாக குறிப்பிட்டார்., பல்வேறு துறைகளில் இருப்பவர்களும் கலைத் துறையில் தற்போது சிறப்பாக இருப்பதை பார்க்க முடிவதாகவும்., கலாஷேத்திரா நிறுவிய காலத்திலிருந்து இன்றுவரை துளியளவும், அதன் கலாச்சாரம் பண்பாடு குறையாத வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மென்மேலும் இந்த கலாஷேத்ரா வளர ராமாயணத்தில் ஒரு அணில் போல் கலாஷேத்திராவுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்., மற்றொரு ஜென்மம் இருந்தால் அதில் கலாஷேத்திராவில் ஒரு மாணவராக இருக்க வேண்டுமென்பது தனது ஆசை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com