தமிழக அரசு இன்று பல்வேறு துறைகளின் செயலாளர்களை மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவின்படி,
பொதுப்பணித்துறை முதன்மை செயலாளராகப் பதவி வகித்த சந்திரமோகன் பணியிடம் மாற்றப்பட்டு சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் தற்போது சுற்றுச்சூழல் வனத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ககன்தீப்சிங் பேடி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளராக இருந்த மணிவாசன் நீர்வளத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் வனத்துறை முதன்மை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹூ மருத்துவத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழக மேலாண் இயக்குனர் ஜான் லூயிஸ் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குனர் பொறுப்பை வைத்திநாதன் கூடுதல் பொறுப்பாக கவனிக்க உள்ளார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயலட்சுமி இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த பிரதீப்யாதவ் உயர்கல்வித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை செயலாளராக டாக்டர்.ஆர்.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை சிறப்புச் செயலாளராக லில்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை, மீன்வளத்துறை துறை செயலாளரான மங்கத்ராம் சர்மா பணியிடம் மாற்றப்பட்டு பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலச்சீர்த்திருத்த துறை ஆணையராகப் பதவி வகித்த வெங்கடாச்சலம் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலச்சீர்த்திருத்த துறை ஆணையராக ஹரிஹரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழிற்துறை முதலீட்டு கழக சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனராக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித துறை செயலாளராக சந்தீப் சக்ஷேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு உப்பு கழக நிறுவன மேலாண் இயக்குனராக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு திடீரென முக்கிய துறைகளின் செயலாளர்களை அதிரடியாக மாற்றியுள்ளது, அரசு நிர்வாக நடவடிக்கையில் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.