தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் இவர்தானா? வெளியான அறிவிப்பு!

தமிழக அரசின் 50 ஆவது தலைமை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி நா. முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நா முருகானந்தம் ஐஏஎஸ்
நா முருகானந்தம் ஐஏஎஸ்ட்விட்டர்
Published on

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி துவங்கிய நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டிருந்தார். இவர் 2023 ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்ற சூழலில், 49 ஆவது புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா 2023 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி பதவியேற்றார்.

இந்த சூழலில்தான், நேற்று (18.98.2024) கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் இறுதியில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் அடுத்து இந்த பதவிற்கு யார் வருவார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 50 ஆவது தலைமை செயலாளராக தற்போது ஐ.ஏ.எஸ் நா. முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1991 ஐ.ஏ.எச் பேட்ச்சை சேர்ந்த முருகானந்தம், சென்னையை பூர்வீகமாக கொண்டவர். தமிழ்நாடு அரசின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். திருநெல்வேலியில் சார் ஆட்சியாளராக பணியை தொடங்கியவர்.

கடந்த அதிமுக ஆட்சியில் தொழிற்துறை முதன்மைச் செயலாளராக இருந்தார். 2022ல் தமிழ்நாடு நிதித்துறையின் முதன்மைச் செயலாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

நா முருகானந்தம் ஐஏஎஸ்
மதுரை : மின்சார வயரில் சிக்கிய அரசு பேருந்து! நடந்தது என்ன?

முதலமைச்சரின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றினார். இப்படி, தமிழ்நாடு அரசின் முக்கிய துறைகள் பலவற்றில் சிறப்பாக பணியாற்றி இவருக்கு தற்போது தலைமை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com