தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் அருகதை கமல்ஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது. நான் அவரோடு நிற்கிறேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளரும் ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிராரியுமான சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் "நேர்மையான உலகத்தரம் வாய்ந்த நிர்வாகத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டுமெனும் ஒரே நோக்கத்தில் ஐஏஎஸ் பதவியை தூக்கி ஏறிந்துவிட்டு அரசியலுக்கு வந்தவன் நான். தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் அருகதை தலைவர் கமல்ஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது. நான் அவரோடு நிற்கிறேன்" என பதிவிட்டுள்ளார் சந்தோஷ் பாபு.
முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து துணைத் தலைவர் மகேந்திரன் விலகினார். அத்துடன், பொன்ராஜ், சந்தோஷ் பாபு உள்ளிட்டோர் கட்சிப்பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்து இருந்தனர். கமல்ஹாசனிடம் ஜனநாயகம் இல்லை என்று மகேந்திரன் குற்றம்சாட்டியிருந்தார். கமல்ஹாசன் தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து கட்சியின் தலைவர் கமலஹாசனும், மகேந்திரன் ஒரு துரோகி என தெரிவித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.