அதிமுக-வில் இருந்து தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும், சசிகலாவை தான் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
அதிமுக-வில் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அதன் பொதுச் செயலாளர் சசிகலா இடையே உச்சகட்ட மோதல் நிலவுகிறது. அதிமுக-வின் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்த மதுசூதனை நீக்கி அதன் பொதுச் செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த மதுசூதனன், அதிமுக-வில் இருந்து தன்னை யாரும் நீக்க முடியாது எனவும், தன்னை அதிமுக-வில் இருந்து நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார். சசிகலாவை, தான் கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் மதுசூதனன் கூறியுள்ளார்.