”என்னுடைய தமிழ் உணர்வுக்கு தொ.பரமசிவனே காரணம்” - கண்கலங்கிய சீமான்

”என்னுடைய தமிழ் உணர்வுக்கு தொ.பரமசிவனே காரணம்” - கண்கலங்கிய சீமான்
”என்னுடைய தமிழ் உணர்வுக்கு தொ.பரமசிவனே காரணம்” - கண்கலங்கிய சீமான்
Published on

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன்(70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.

அவரது மறைவு குறித்து சீமான் கூறும்போது, “ மற்றவர்களுக்கு இது ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி கிடையாது. காரணம் நான் அவரிடம் படித்த மாணவன். நான் அப்போது இளங்கலை பொருளாதார மாணவன். என்னுடைய தமிழ் உணர்வுக்கு தொ.பரமசிவனே காரணம். என்னை ஊட்டி வளர்த்தார் என்பதில் மாற்றுச் செய்தி இருக்க முடியாது.

நான் கல்லூரி முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, கல்லூரி ஆண்டு மலருக்கு அனைவரையும் கட்டுரை, கவிதை எழுதச் சொன்னார். நான் காதல் கவிதைகளை எழுதிக்கொடுத்தேன்.

அதை பார்த்த அவர் அதனை எனது முகத்தில் தூக்கி எறிந்தார். உடனே எனது அண்ணன்களுடன் நான் அவரை பார்க்கச் சென்றேன். எனது அண்ணன்கள் அவரிடம் கவிதைகளை கிழித்ததற்கான காரணத்தைக் கேட்டபோது அவன் காதலைத்தான் பாடியிருக்கிறான். அவனை மனிதனை பாடச் சொல்லு என்றார். அன்றிலிருந்துதான் எனக்கு மானுடம் குறித்த சிந்தனையே வந்தது. தமிழ் இனத்தின் அறிவுப் பெட்டகம்.

நான் கட்சி தொடங்கியபோது எனக்கு ஊக்கமளித்து எனது தம்பிகளுக்கு அரசியல் வகுப்பெடுத்த பேராசான் . அவரிடம் நான் தமிழ் படித்த மாணவன். அவருடைய மாணவன் என்கிற திமிர் எனக்கிருக்கிறது”என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com