திருப்பத்தூர் | பாலினம் கண்டறியும் சோதனை செய்த தம்பதி; நள்ளிரவில் சுற்றி வளைத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் அருகே சட்ட விரோதமாகக் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து தெரிவித்து வந்த கணவன்- மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஐயப்பன் - கங்கா
ஐயப்பன் - கங்கா PT WEB
Published on

திருப்பத்தூர் செய்தியாளர் - விக்டர் சுரேஷ்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பசுமை நகர்ப் பகுதியில் தம்பதியர் இருவர், கருவில் இருப்பது ஆணா பெண்ணா எனக் சட்ட விரோதமாகக் கண்டறிந்து 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் பெற்று வருவதாக, மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் கண்ணகிக்கு ரகசியத் தகவல் சென்றுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மருத்துவக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

சீல் வைத்த அதிகாரிகள்
சீல் வைத்த அதிகாரிகள்

அப்போது திருப்பத்தூரை அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (29) மற்றும் அவருடைய மனைவி கங்கா கௌரி (27) ஆகிய இருவரும் பசுமை நகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கர்ப்பிணிகளுக்குச் சட்டவிரோதமாகக் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனப் பரிசோதித்து வந்துள்ளனர். அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில், அங்கு வரும் கருவுற்ற பெண்களிடம் இதற்காக அவர்கள் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது.

ஐயப்பன் - கங்கா
கல்லூரி மாணவியை திருமணம் செய்து தருமாறு வீடுபுகுந்து ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவன் மனைவி இருவரையும் கைது செய்து அந்த வீட்டிற்குச் சீல் வைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரம்
பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரம்

மேலும் அவர்களிடம் இருந்து, கருவில் இருப்பது ஆணா பெண்ணா எனக் கண்டறியும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

ஐயப்பன் - கங்கா
கவுகாத்தி: மின்னல் தாக்கியதில் விமானநிலையத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து; உயிர் தப்பிய பயணிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com