கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவில் உள்ள தொட்டவ்வனஹல்லியைச் சேர்ந்தவர் ஜெகன்நாத். இவர் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர். இவருக்குச் சொந்தமான வீடு சால்லகெரே கேட் பகுதியில் உள்ளது. இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அந்த வீட்டில் ஜெகன்நாத் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், அவரது குடும்பத்தினருக்குக் கடுமையான உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.ஜெகன்நாத் மனைவி பிரேமாவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் ரூ.2 கோடி ரூபாய் செலவு செய்தும் அவரது உடலில் முன்னேற்றம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகப் பக்கத்து வீடுகளில் எந்த தொடர்பு இல்லாமல் ஜெகன்நாத் குடும்பம் வசித்து வந்துள்ளதுள்ளனர்.
இதனையடுத்து ஜெகன்நாத் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனத் தெரிகிறது. இந்த வீடு பாழடைந்து கிடந்ததுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பாழடைந்த வீட்டை இன்று சோதனை செய்தனர். அந்த வீட்டில் 5 மனித எலும்புக்கூடுகள் கிடந்துள்ளது. இதனைப்பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்தது சித்ரதுர்கா மாவட்ட காவல்துறை கூடுதல் உதவி காவல் கண்காணிப்பாளர் குமாரசாமிக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் கைரேகை குழு மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனை செய்தனர். சோதனையில் மனித எலும்புக்கூடுகள் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது எனவும் இவர்கள் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
ஜெகன்நாத் அவரது மனைவி பிரேமா மற்றும் மகன்கள், மகள் இறந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அந்த வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஒரே நேரத்தில் இறந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரபரப்பான அந்த பகுதியில் பூட்டப்பட்ட வீட்டில் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சித்ரதுர்கா மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.