கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை... மாபெரும் மனித சங்கிலி போராட்டம்...?

கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை... மாபெரும் மனித சங்கிலி போராட்டம்...?
கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை... மாபெரும்  மனித சங்கிலி போராட்டம்...?
Published on

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி (750 km)வரை நாளை நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக செய்தி பரவி வருகிறது.

தீயாக பரவிவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு கைகோர்க்கும் விதமாக கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம், அமைதி வழியில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கிலோமீட்டர்க்கு 3000 நபர்கள் வீதம் என்றால் 750 கிலோமீட்டர்க்கு 22,50,000 நபர்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எளாவூர், பெடிகுப்பம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், கோயம்பேடு, வடபழனி, அசோக்பில்லர், கிண்டி, தாம்பரம், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், விழுப்புரம், பிடாகம், அரசூர், உளுந்தூர்பேட்டை, வேப்பூர், தொழுதூர், பெரம்பலூர், பாடலூர், சிறுகனூர், சமயபுரம், டோல்கட், திருச்சி, எடமலாபட்டி, புத்தூர், நாகமங்கலம், கொடும்பலூர், துவரங்குறிச்சி, கொட்டம்பட்டி, மேலூர், மதுரை, திருமங்கலம், கல்லிகுடி, விருதுநகர், துலுக்கபட்டி, சாத்தூர், மந்திதொப்பு,இடைசேவல், கயத்தாறு, குறிச்சிகுளம், திருநெல்வேலி, vm சத்திரம், பொன்னகுடி, செங்குளம், பண்ணன்குலம், நாங்குநேரி, வள்ளியூர், வடக்கன்குளம் ரோடு, அஞ்சுகிராமம், நரிக்குளம், வழியாக கன்னியாகுமரி வரை இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டமானது ஒரு சாதனையான அமையலாம். இந்த சாதனை முயற்சிக்கு வித்திடும் வகையில் அந்த மாவட்ட மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதற்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தின் ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாபெரும் போராட்டத்தில் கைக்கோர்க்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com