என்.எல்.சி.-க்கு எதிராக பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது எப்படி?-பிரத்யேக தகவல்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவி கிராம பகுதியில் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெற்பயிரை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் என்.எல்.சி அலுவலகத்தின் நுழைவாயிலில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, பா.ம.கவினர் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பல காவல்துறையினர் காயமடைந்ததைத் தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட பாமகவினர் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி கலைத்தனர். தொடர்ந்து வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதுடன் கண்ணீர் புகைக் குண்டுகளையும் பிரயோகித்தனர்.
போராட்டம் எப்படி கலவரமாக மாறியது என்பது குறித்த பிரத்யேக தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..