கோயில் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? - இணையத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? - இணையத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவு
கோயில் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? - இணையத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவு
Published on

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர் யார்? கோயில் சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது. அவை தொடர்பான முழு விபரங்களையும் 10 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ''கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், கட்டண விபரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பட்டியல் வைக்கவும், பூஜை கட்டணங்கள், வாடகை விபரம், நன்கொடை, செலவினங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்த பதில்மனுவில், ''கோயில் சொத்துக்களை கண்டறிய அடையாள குழுவும், பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்கள், குடியிருப்போர், அனுபவத்தில் உள்ளோரிடம் இருந்து வரவேண்டிய ரூ. 297.63 கோடி பாக்கியை கேட்டு 42,818 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில், 14 ஆயிரத்து 26 பேரிடம் இருந்து ரூ. 32.49 கோடி வசூலாகியுள்ளது'' என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், ''கோயில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர் யார்? சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? மற்றும் கோவில் சம்மந்தமான முழு விபரத்தை 10 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com