அதிகரிக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை... எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு என கணிப்பு

அதிகரிக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை... எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு என கணிப்பு
அதிகரிக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை... எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு என கணிப்பு
Published on

கொரோனா இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டுக்கும் பிற மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் தேவை எந்த அளவுக்கு இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.

நாடு முழுவதும் 56 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலிருந்து அந்தந்த மாநிலங்கள் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்கின்றன. கொரோனா அதிகமாக பரவும் மாநிலங்களில் ஆக்சிஜன் தேவைப்படும் அளவு குறித்தும், அதன் உற்பத்தி குறித்தும் மத்திய அரசு கணிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 25-ஆம் தேதி தமிழகத்துக்கு 320 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் எனவும், அவை எந்தவித தட்டுபாடுமின்றி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் மகாராஷ்டிராவில் 1,750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ளது. ஆனால், அந்த மாநிலத்திற்கு 1,587 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கொடுக்கப்படும், 163 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதேபோல், குஜராத் மாநிலத்திற்கு 1,050-ல் ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்படும் எனவும், 50 மெட்ரிக் டன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதியை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு 465 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மகாராஷ்ராவில் 413 மெட்ரிக் டன்னும், குஜராத்தில் 300 மெட்ரிக் டன்னும், உத்திரபிரதேசத்தில் 120 மெட்ரிக் டன்னும், டெல்லியில் 96 மெட்ரிக் டன்னும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com