"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்" சிவதாணு பிள்ளை கருத்து

"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்" சிவதாணு பிள்ளை கருத்து
"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்" சிவதாணு பிள்ளை கருத்து
Published on

வரும் காலங்களில் உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார். 

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவதானுபிள்ளை கலந்து கொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மத்தியில் விண்வெளி துறையில் இந்தியாவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிவதானுபிள்ளை உரையாற்றினார். மாணவர்கள் பலர் தங்களது சந்தேகங்களை அவரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். நிகழ்ச்சி நிறைவுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அதில் இந்தியா விண்வெளி துறையில் 4 நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியா தவிர மற்ற 3 நாடுகளும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி விட்டது. அதன் தொடர்ச்சியாக 2022 ல் 3 இந்தியர்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட உள்ளனர். மனிதனை விண்வெளிக்கு அனுப்பினால் திரும்ப கொண்டு வர வேண்டிய தொழில் நுட்பம், புறப்படும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால் மனிதனை உயிருடன் காப்பாற்றும் நுட்பம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனை சுற்றி வரும் கோள்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உள்ள உலோகங்கள் குறித்தும் தெரிந்து கொண்டால் உபயோகமாக இருக்கும். செவ்வாய் கிரகம் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி போல தண்ணீருடன் செழிப்பாக இருந்த இடம். தற்போது வறண்டு காணப்படுகிறது. இப்போதுள்ள நிலையின் படி பூமியும் ஒரு காலம் வறண்டு போகலாம். தற்போதுள்ள நிலை நீடித்தால் இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுக்கு பிறகு பூமி உயிரினங்கள் வசிக்க முடியாத கோளாக மாறலாம் என்று தெரிவித்தார். 

மேலும் தெரிவித்த அவர், அவ்வாறான நிலை ஏற்பட்டால் மனிதர்களை எவ்வாறு காப்பது என்ற ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. தற்போது நீல நிறத்தில் பூமியை விட இரு மடங்கு பெரியதான இரு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் எவ்வாறு வாழ்வது என்பதே மனிதர்களின் அடுத்த பிரச்னையாக இருக்க போகிறது. இனி பூமியை விடுத்து விண்வெளியில் தான் நடக்க வேண்டும். நாம் பூமியை விட்டு சென்றாலும் மனித இனம் அழிந்து விடக் கூடாது. எனவே தற்போதுள்ள விஞ்ஞானிகள் அடுத்த பூமி குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com