சென்னையில் சொத்து வரி உயர்வு இவ்வளவா? - முழு விவரம்

சென்னையில் சொத்து வரி உயர்வு இவ்வளவா? - முழு விவரம்
சென்னையில் சொத்து வரி உயர்வு இவ்வளவா? - முழு விவரம்
Published on

சென்னை பெருமாநகராட்சியில் அடையாறு, திருவொற்றியூர், மாதவரம், அண்ணா நகர், தேனாம்பேட்டை, ஆலந்தூர் ஆகிய மண்டலங்களுக்கான சொத்து வரி உயர்வு தொகை உத்தேசமாக வெளியிடப்பட்டுள்ளது.

அடையாறு மண்டலத்தில் 600 சதுர அடிக்கு கீழான கட்டடங்களுக்கு 308 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இது 462 ரூபாய் ஆக அதிகரிக்க உள்ளது. ஆயிரத்து 201 முதல் ஆயிரத்து 800 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு வரி ஆயிரத்து 461 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 922 ரூபாயாக அதிகரிக்க உள்ளது. திருவொற்றியூர் மண்டலத்தில் 600 சதுர அடிக்கு கீழான கட்டடங்களுக்கான வரி 211 ரூபாயில் இருந்து 264 ரூபாயாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 201 சதுர அடி முதல் ஆயிரத்து 800 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு வரி 736 ரூபாயில் இருந்து ஆயிரத்து 288 ரூபாயாக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மாதவரம் மண்டலத்தில் 600 சதுர அடிக்கு கீழான கட்டடங்களுக்கு 220 ரூபாயாக ஆக உள்ள வரி 275 ரூபாய் ஆக உயர உள்ளது.

ஆயிரத்து 201 சதுர அடி முதல் ஆயிரத்து 800 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு வரி ஆயிரத்து 320 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 310 ஆக அதிகரிக்கப்படுகிறது. அண்ணா நகர் பகுதியில் 600 சதுர அடிக்கு கீழான கட்டடங்களுக்கு வரி 307 ரூபாயிலிருந்து 461 ரூபாயாக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 201 முதல் ஆயிரத்து 800 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு வரி ஆயிரத்து 485 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 970 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 600 சதுர அடிக்கு கீழ் உள்ள கட்டடங்களுக்கு வரி 475 ரூபாயில் இருந்து 713 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரத்து 201 சதுர அடி முதல் ஆயிரத்து 800 சதுர அடி வரை வரி 2 ஆயிரத்து 75 ரூபாயில் இருந்து 4 ஆயிரத்து 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் 600 சதுர அடிக்கு கீழான கட்டடங்களுக்கு வரி 320 ரூபாயில் இருந்து 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 201 சதுர அடி முதல் ஆயிரத்து 800 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு வரி 825 ரூபாயில் இருந்து ஆயிரத்து 444 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தொகைகள் அனைத்தும் 6 மாதத்திற்கானவை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தொகைகள் உத்தேசமானதே என்றும் அந்தந்த பகுதி வழிகாட்டு மதிப்பிற்கேற்ப வரியின் அளவு சற்றே மாறுபடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com