ஓசூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்துச் சிதறியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, பெங்களூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வைஷ்னவி நகர் பிரதான சாலையில் நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், வடிவேல் என்பவர் வேலூர் உரிமம் பெற்று (சுமார் 1500 கிலோ வரை இருப்பு வைக்கலாம்.) சொந்தமான பட்டாசு கடை நடத்தி வருகிறார்,
இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் கடை முழுவதும் பட்டாசுகள் வெடித்து புகை மூட்டமாக காணப்பட்டது. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிடுந்த போலீசார் இதைப் பார்த்து உடனடியாக ஓசூர் மாநகராட்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயணைக்கும் பணியில் ஈட்டுப்பட்டனர், ஆனால், தீ கட்டுப்படுத்த முடியவில்லை இதையடுத்து ராயகோட்டை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈட்டுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பட்டாசு கடை உரிமையாளர் வடிவேலு சிவகாசிக்கு சென்றுள்ளதால் தீப்பற்றி எரிந்த கடையில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி எரிந்து நாசமான நிலையில் பட்டாசுகளின் மதிப்பு தெரியவில்லை. பட்டாசு கடை உரிமையாளர் வந்த பிறகு தான் வெடித்துச் சிதறிய பட்டாசுகளின் முழுமையான மதிப்பு தெரிய வரும், முதற்கட்ட விசாரணையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது