சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் வண்ண வண்ண ஓவியங்களால் அழகுபெற்றுள்ளது. வெறும் அழகுமட்டுமல்லாமல் அழுத்தமான விழிப்புணர்வையும் அங்குள்ள ஓவியங்கள் பதியவைக்கின்றன
சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தை கடந்து செல்பவர்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கும் அங்குள்ள ஓவியங்கள். ரயில் நிலைய கட்டடத்தின் வெளிப்புறம் முழுவதும் கோர்வையாக வரையப்பட்ட ஓவியம் தற்போது சென்னையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இணையங்களில் இந்திரா நகர் ஓவியத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
பல தரப்பட்ட மனித முகங்கள் ஆனால் ஒரு பாதி ஒருவரின் முகம், மறுபாதி மற்றொருவரின் முகம் என இந்திரா நகர் ஓவியம் சொல்லும் விழிப்புணர்வு அழுத்தமானது. எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக வண்ணங்களால் நிறைந்திருக்கிறது இந்த கட்டடங்கள். எய்ட்ஸ் தொடர்பான கட்டுக்கதைகளை உடைத்து அதன் மூலம் எய்ட்ஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த சுவர் ஓவியத்தின் நோக்கமாக உள்ளது.
எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களும், நம்முள் ஒருவர் தான். நம்மை போல மனிதர் தான். அவர்களை தனித்து ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும். நாம் அனைவரும் இங்கு மனிதகுலமாகவே இருக்கிறோம் என மனிதநேயத்தை உரக்கச் சொல்கின்றன அங்கு வரையப்பட்ட முகங்கள்.
ஸ்டார்ட் இந்தியா பவுண்டேசன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், டைடல் பார்க், தெற்கு ரயில்வே இணைந்து இந்த ஓவியத்தை வரைந்துள்ளன. இந்த விழிப்புணர்வு சுவர் ஓவியத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
வெறும் அழகுமட்டுமல்லாமல் அழுத்தமான விழிப்புணர்வையும் அங்குள்ள ஓவியங்கள் பதியவைக்கின்றன
Source: Asian Paints