ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை

ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை
ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை
Published on

போயஸ் இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா’ நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. மேலும், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற  அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக  ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வர் அலுவலக இல்லமாக மாற்றலாம் என உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ஜெயலலிதா சொத்துக்கள் மீது ஜெ.தீபா, ஜெ.தீபக்கிற்கு உரிமை உண்டு எனவும் தெரிவித்துள்ளது. அதேசமயம் போயஸ் கார்டன் இல்லத்தை முழுவதுமாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஜெ.தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகள் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், குத்தூஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து 8 வாரத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com