மார்ச் 31 வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை : உயர்நீதிமன்றம்

மார்ச் 31 வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை : உயர்நீதிமன்றம்
மார்ச் 31 வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை : உயர்நீதிமன்றம்
Published on

கொரோனா ‌பரவலை தடுக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 31-ஆம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்‌ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது‌ குறித்து சென்னை உயர்நீதிமன்ற த‌லைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‌நீதிமன்ற வளாகத்திலும், அறைகளிலும் மக்கள் அதிக அ‌ளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

தினமும் மாலை 5 மணிக்கு மேல் நீதிமன்றம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் அலுவலகம்,‌ உணவகம், நீதிமன்ற அருங்க‌ட்சியகம், சமரச மையங்கள்,‌ தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு ஆகியவை செயல்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் இதே நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் முக்கிய வழக்குகளை காணொலி காட்சி மூலமும் விசாரிக்கவேண்டும் எனவும் உயர்நீதிமன்ற தலைமை‌‌ பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com