ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கிருந்தீர்கள் ? - ஜெ.தீபாவிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கிருந்தீர்கள் ? - ஜெ.தீபாவிடம் உயர்நீதிமன்றம் கேள்வி
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கிருந்தீர்கள் ? - ஜெ.தீபாவிடம் உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லம் அரசுடமையாக்கப்படுவதற்கு தற்காலிக தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம், கட்டிடம், மரங்களுக்கு இழப்பீடாக ரூ.68 கோடி நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களை கையகப்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெ.தீபா தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் ? எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன் தீபா தொடர்ந்த இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

ஏற்கெனவே, வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபாவின் சகோதரர் தீபக் தொடர்ந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com