“உத்தரவுகளை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது?” - சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் கேள்வி

“உத்தரவுகளை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது?” - சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் கேள்வி
“உத்தரவுகளை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது?” - சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் கேள்வி
Published on

சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல் தடுப்பது எது என அரசு மற்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு கடந்த ஒரு வருடமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தனக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் தனக்கென ஒதுக்கப்பட்ட வசதிகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே செய்து தரப்பட்டுள்ளது” என பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

மேலும், வழக்கு ஆவணங்கள் ஒப்படைக்கவில்லை எனவும் டிஎஸ்பி பன்னீர்செல்வம் ஆவணங்களை தரவில்லை எனவும் பொன் மாணிக்கவேல் தரப்பு கூறியது. டிஎஸ்பி பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கு வருவதே இல்லை எனவும் மின்னஞ்சல் அனுப்பினாலும் பதில் இல்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான டிஎஸ்பி பன்னீர்செல்வம் வழக்கு ஆவணங்கள் தன்னிடம்தான் இருக்கிறது என தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் வழக்கின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறியவே பொறுமையாக இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவுகள் தொடர்ந்து அவமதிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாதா? சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பிக்கும் 
உத்தரவுகளை நிறைவேற்றாமல் தடுப்பது எது என அரசுக்கும் காவல்துறைக்கும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து வழக்கு ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்றால் பணியை செய்ய விடாமல் தடுத்ததற்காக கைது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என பொன் மாணிக்கவேல் தரப்பு கூறியது. சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்யலாம் என்றால் அதற்கு முழு அதிகாரத்தையும் நீதிமன்றம் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் பொன்.மாணிக்கவேலுக்கு முழுவசதிகளை செய்து தர வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அரசு எவ்வாறு செயல்படுத்தியுள்ளது என்பதை அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், வரும் வியாழக்கிழமை ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனிடையே மனுதாரர் யானை ராஜேந்திரன் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் அதனால் தன் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதுத்தொடர்பாகவும் டிஜிபி தரப்பு வியாழக்கிழமை பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் அதையடுத்து சிறப்பு அதிகாரியாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com