ராமநாதீசுவரர் கோவிலின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு - உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

ராமநாதீசுவரர் கோவிலின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு - உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
ராமநாதீசுவரர் கோவிலின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு - உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோவிலின் சொத்துக்கள் அக்கிரமிக்கப்படுவது குறித்த புகாரை உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த போரூரில் உள்ள ராமநாதீசுவரர் கோவிலின் சொத்துகள், நிலங்கள் அபகரிக்கப்படுவதாக திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான சேலத்தைச் சேர்ந்த ஆ. ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பல புகார்களை அளித்து வந்தார். ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளதால் கோவிலுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குத்தகைதாரர்களிடம் வசூலிக்க வேண்டிய பாக்கியும் அதிக அளவில் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள ராதாகிருஷ்ணன், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.

அதன்மீது தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆக்கிரமிப்புகளும், அபகரிப்புகளும் அதிகரித்து வருவதால் அவற்றை தடுத்து கோவில் சொத்துக்களை மீட்க வேண்டுமெனவும், அதற்கான தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆ. ராதாகிருஷ்ணன் அளித்த மனுக்களை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com