“நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் என்னதான் நடக்கிறது?” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

"வழக்கு தொடர்பாக எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை நபர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” உயர்நீதிமன்றம் கேள்வி
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நியோமேக்ஸ்
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நியோமேக்ஸ்pt web
Published on

செய்தியாளர் சகாய பிரதீபா

நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட்

மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், கபில், வீரசக்தி என பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், நெல்லை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும். நிலம் தருவதாகவும் ஆசை வார்த்தைகளைக் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.

இதை நம்பி பலர் பல ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால், நிறுவனத்தினரோ கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.

இதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முடிவில், மதுரையைச் சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நியோமேக்ஸ்
சாதி மறுப்பு திருமணம் செய்த கர்ப்பிணி மகளை கொலைசெய்த தந்தை; மரண தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

நீதிபதி அடுக்கடுக்கான கேள்வி

இந்த நிலையில் நியோமேக்ஸ் மோசடி வழக்கில் ஜாமின் பெற்ற நிர்வாகிகள் சார்லஸ் மற்றும் இளையராஜா ஆகியோருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி ஜெயின்குமார் உள்ளிட்ட சிலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செந்தில் வேலு என்பவர் முன் ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர்நீதிமன்றம் மதுரைக் கிளைபுதிய தலைமுறை

இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, "வழக்கு தொடர்பாக எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை நபர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பினர்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில், "இந்த வழக்கில் நியோ மேக்ஸ் நிறுவன சொத்துக்கள் தற்போது கண்டறியப்பட்டு அதனை வழக்கில் இணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறை செயலாளரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனவே மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நியோமேக்ஸ்
”தொழில்நுட்ப கோளாறு அல்ல; கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற இதுதான் காரணம்”- விசாரணையில் பகீர் தகவல்

அதற்கு நீதிபதி, இந்த வழக்கில் என்னதான் நடக்கிறது? இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும்? என கேள்வி எழுப்பியதோடு, சொத்துக்களை வழக்கில் இணைத்து அரசாணை வெளியிடுவதற்கு தாமதிக்க காரணம் என்ன? இனியும் கால அவகாசம் வழங்க முடியாது. அக்டோபர் 19-ம் தேதிக்குள் நியோமேக்ஸ் சொத்துக்களை இணைத்து அரசாணை வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறைச் செயலர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என எச்சரித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, நியோமேக்ஸ்
ஹரியானாவில் பாஜக அரசு தொடர்ச்சியாக மூன்றாவது முறை பதவியேற்பு.. மீண்டும் முதல்வரானார் நயாப் சிங் சைனி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com