மஹாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை குறிப்பிட்டு பேசினர்.
புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறதைப் பார்க்கிறோம். இது துரதிஷ்டவசமானது எனக் கூறியுள்ளனர்.
இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளதாக நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோரும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என தெரிவித்தனர்.
மேலும், திருப்பூரில் அசாம் பெண்ணை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக்கட்டுப்பாடும் இல்லை, உரிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.