பேரணிக்கு அனுமதி தருவதில் போலீஸுக்கு என்ன பிரச்னை? - நீதிபதிகள் சரமாரி கேள்வி

பேரணிக்கு அனுமதி தருவதில் போலீஸுக்கு என்ன பிரச்னை? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
பேரணிக்கு அனுமதி தருவதில் போலீஸுக்கு என்ன பிரச்னை? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
Published on

திமுக மற்றும் தோழமை கட்சிகளின் பேரணிக்கு தடை கோரிய வழக்கில் நீதிபதிகள் அரசுதரப்புக்கு சரமாரி கேள்விகளை முன் வைத்து வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பேரணிக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிம்னறத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் தாக்கல் செய்துள்ளார். பொதுச்சொத்திற்கு சேதம், அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் பேரணிக்கு அனுமதி தரக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக மற்றும் தோழமை கட்சிகளின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் தகவல் தெரிவித்தார். உருவபொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு செய்ய மாட்டோம் என திமுக உத்திரவாதம் தரவில்லை என வாதிடப்பட்டது.

மனுதாக்கல் செய்த பிறகு திமுக பேரணிக்கு அனுமதி மறுப்பா அல்லது அதற்கு முன்பா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்ற விதிமுறைகாலை பின்பற்றினால் அனுமதிப்பீர்களா? ஜனநாயக நாட்டில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை யாரும் தடுக்க முடியாது. ஆனால் விதிமுறைகளை பின்பற்ற வெண்டியது அவர்கள் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு திடீரென பாதையை மாற்றுவார்கள் எனவும் இப்போதைக்கு அவர்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை பின்பற்றுவதாக புதிய விண்ணப்பம் கொடுத்தால் புதிதாகத்தான் பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டது.

ஒரு வேலை காவல்துறை சொன்ன நிபந்தனைகளை திமுக ஏற்றால் , அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உங்கள் நிபந்தனைக்ளுக்கு மீறிய போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடந்தால், டிரோன் போன்றவை மூலம் வீடியோ எடுக்கப்பட்டால் அது முக்கிய சாட்சியமாக இருக்கும். நாங்கள் இடைக்கால உத்தரவு மூலம் அனுமதிப்பதாக வைத்துக் கொண்டால், போராட்டம் ஆர்ப்பாட்டத்தை முறையாக படப்பிடிப்பு செய்து விதிமீறல் ஏற்படாமல் உள்ளதா என கண்காணிக்க முடியுமா எனவும் அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க முடியுமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மனுவில் உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 8 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com