அரசின் மது விலக்கு கொள்கை மக்களின் பொதுநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக தன் மீதும் மேலும் 22 பேர் மீதும் பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என பழனியப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், மது விலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு. ஆனால், அந்த கொள்கை என்பது மக்களின் பொதுநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார். மேலும் இருபத்து மூன்று பேர் மீதான வழக்கை ரத்து செய்தார்.