சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க அரசாணை: உயர்நீதிமன்ற கிளை

சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க அரசாணை: உயர்நீதிமன்ற கிளை
சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க அரசாணை: உயர்நீதிமன்ற கிளை
Published on

சிலைகள் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிலை கடத்தல் தடுப்பு தனி அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமித்த உத்தரவில் சில சந்தேகங்கள் உள்ளதாகவும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை காணொலி காட்சி மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார்.

அப்போது, சிலைகள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும், இதற்காக திருச்சியில் அவருக்கு தலைமை அலுவலகம் அமைத்து, அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துக் கொடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இதற்கான அரசாணையை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகின்ற 10 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com