கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் அதேவேளையில் சத்தமில்லாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது வெயில். நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரங்களில் 37டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்கிறது வானிலை மையம்.
அடுத்த இரண்டு நாளுக்கு மேகமூட்டமாகவோ, அல்லது வெயிலோ இருக்கும். ஆனால் அடுத்த வாரம் முதல் வெயில் கடுமையாக இருக்குமென்று
தெரிவித்துள்ளது. வரும் மாதங்களில் வழக்கம்போல் வெயில் இருக்குமென்றாலும் கடந்த வருடம் போல் 40டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடுமையான வெயிலுக்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா பரபரப்பு இடையே அதிகரித்து வரும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதும் தேவையான ஒன்று. வரும் கோடையில் இருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன?