தமிழ்நாடு
பல மணி நேரம் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. கடும் போக்குவரத்து நெரிசலில் திருச்சி மாநகரம்! ஓர் களஆய்வு
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன நெரிசலுக்கு காரணம் என்ன? மக்கள் எவ்வளவு சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்பது குறித்து புதிய தலைமுறையின் கள ஆய்வை பார்க்கலாம்.
மலைக்கோட்டை மாநகரமான திருச்சி மாநகருடைய பிரதான நுழைவு வாயில் பகுதி திருச்சி காவேரி மேம்பாலம். இந்த பாலம் தான் திருச்சி மாநகருக்குள் வாகனங்களை இணைக்கும் பிரதான சாலையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் பள்ளி கல்லூரிகள் அதிகம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது.
அதேபோல் திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியில் காந்தி சந்தை அமைந்துள்ளது. இந்த காந்தி சந்தையில் இருந்து நேரே சென்றால்p திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வரும். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் காட்டூர் பகுதியை கடந்துதான் திருச்சி மாநகரத்துக்குள் செல்ல வேண்டும். பால் பண்ணை முதல் திருச்சி மாநகர் வரையிலான நெரிசல் காரணமாக வாகன பயண நேரம் அதிகரிப்பதோடு, மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகின்றனர்.