காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை – நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 6,500 கனஅடியில் இருந்து 14,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்புpt desk
Published on

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

கர்நாடகா, தமிழ்நாடு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், கடந்த ஒரு வாரமாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து சரிந்து, வினாடிக்கு 6500 கன அடியாக இருந்தது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால், மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியில் இருந்து 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுற்றுலா பயணிகள் குளிக்க தடைpt desk

இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதைப் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
நவம்பரில் இயல்பை விட அதிகமழை.. மறுபுறம் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. என்ன காரணம்?

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், மீண்டும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com