தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டத்துக்கு இடையூறு இல்லாமல் பெய்த மழை.. எங்கெங்கு பெய்தது?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தீபாவளி கொண்டாட்டத்துக்கு இடையூறு இல்லாமல் பெய்த மழை விவரங்களை பார்க்கலாம்...
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைpt web
Published on

நாகையில் மதியத்திற்கு மேல் கனமழை பெய்தது. காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் ஏற்பட்டது. இதில், மக்கள் தீபாவளியை கொண்டாடிய நிலையில், நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி, வேதாரண்யம், செம்போடை, கத்திரிப்புலம், கரியாபட்டினம் பகுதிகளில் மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒருமணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. மன்னார்குடி, சேரங்குளம், பாமணி, காரக்கோட்டை, மேலநெம்மேலி, கோட்டூர், பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால், பட்டாசு புகை மூட்டம் மறைந்தது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை
நவ. முதல் வார இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்திற்கு மிக கனமழை இருக்குமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுப் பகுதியில் மழை கொட்டியது. காட்டுநெமிலி, மதியனூர், பாண்டூர், செம்மணங்கூர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் காற்றுடன் மழை பெய்தது.

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி பகுதிகளில், ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாரல் மழை பெய்தது. இடைவிடாத சாரல் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com