கனமழை காரணமாக கொடைக்கானலில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே இரு தினங்களுக்கு முன் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்தது. இதையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியதால், தென் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.
இதற்கிடையே கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு முழுவதும் விடாமல் பெய்த மழையால் மலைப்பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. அத்துடன் சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. நேற்று அதிகாலை முதலே கொடைக்கானலில் கனமழை பெய்து வந்ததால் மாவட்ட ஆட்சியர் வினய் அங்கு முகாமிட்டுள்ளார். மீட்பு பணிகள் தொடர்பாக ஆட்சியர் கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.