குமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ''வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,புதுக்கோட்டை,சிவகங்கை,தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு. வடமாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்’’ என தெரிவித்துள்ளது.