புயல் போல் கொட்டித் தீர்க்கும் கனமழை: சென்னையின் கள நிலவரம் என்ன?

புயல் போல் கொட்டித் தீர்க்கும் கனமழை: சென்னையின் கள நிலவரம் என்ன?
புயல் போல் கொட்டித் தீர்க்கும் கனமழை: சென்னையின் கள நிலவரம் என்ன?
Published on

சென்னையில் ஏற்கனவே நள்ளிரவு முதல் மழை விடாமல் பெய்து வரும் நிலையில், மேலும் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பலான இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதலே கனமழை பெய்துவருகிறது. தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், குரோம்பேட்டை, பல்லாவரம், உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை கனமழையாகவும் பின்னர் மிதமான மழையாகவும் பெய்துவருகிறது.

வேளச்சேரி, ஆதம்பக்கம், பெரியார்நகர் என பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழையால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிற்காமல் பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாம்பரம் சுரங்கப்பாதை, வழக்கம்போல இந்த மழையிலும் மூழ்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் இருந்து கிழக்கு தாம்பரம் செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கன மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பகுதிவாசிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சென்னையின் பல சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். கிண்டி தொழிற் பேட்டையில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்லக்கூடிய சைதாப்பேட்டை பஜார் சாலையில் கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் தேங்கியுள்ளதால் பஜார் சாலையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் மேலும் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை சமூக வலைதளவாசிகள் அங்காங்கே மழையின் அளவை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com