சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அசோக் நகர், மேற்குமாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
போலவே குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், தாழ்வான இடங்கள், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. திடீர் மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சென்னை மக்கள் நிம்மதியடைந்தனர்.
சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10.4 சென்டி மீட்டரும், சோழிங்கநல்லூரில் 8.2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோன்று செம்பரம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டரும், திருவேற்காட்டில் 6.2 சென்டி மீட்டரும், மடிப்பாக்கத்தில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாகவும், இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.