தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் நாளை மாமல்லப்புரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கிறது என்பதால், வங்கக்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மழை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து சென்னை முழுக்க தற்போது கனமழை பெய்து வருகிறது.
வெள்ள நிவாரண பணிகளுக்காகவே 5 மீட்புக்குழுக்களை அமைத்துள்ளது அரசு. அதேபோல, வெள்ள நிலைமைக்கு ஏற்ப மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.