புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு சார்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “வாட்ஸ் அப்பில் யாரோ ஒருவர், வரும் 27, 28 ஆம் தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் எனவும், அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆனால், வானிலை ஆய்வு மையத்திலிருந்து அவ்வாறான தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இந்த அதிகாரபூர்வமில்லாத தகவலை எண்ணி பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, சமூக வலைதளங்களில் பரவிய இந்த தவறான தகவலை நம்பி பொதுமக்கள் அச்சத்தில் மெழுகுவர்த்தி, பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகளை வாங்கிக் குவிக்க தொடங்கினர். இதனால் கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில், மெழுகுவர்த்தி உள்ளிட்டவை விற்றுத் தீர்ந்தன