சென்னையில் 1915ஆம் ஆண்டு முதல் கடந்த 100 ஆண்டுகளில், இந்த ஆண்டு அதிகளவு ஜனவரி மாத மழை பொழிந்துள்ளது என்று வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்திருக்கிறார்.
சென்னை மழை தொடர்பாக பிரதீப்ஜான் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ புயல் இல்லை, காற்றழுத்த தாழ்வுநிலை, குறைந்த அழுத்தம் இல்லை ஆனால் சென்னையில் அதிகளவு மழை பொழிந்துள்ளது. பொதுவாக ஜனவரி மாத சராசரியின்படி சென்னையின் மழைப்பொழிவு வெறும் 20 மி.மீ தான், ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாத மழையை வெறும் 15 மணி நேரத்திற்குள் 7 மடங்காகப் பெற்றுள்ளோம். நள்ளிரவு முதல் அதிகபட்சமாக தரமணியில் மட்டும் 170 மி.மீ மழை பொழிந்துள்ளது, மீனம்பாக்கத்தில் 149 மி.மீ, நுங்கம்பாக்கத்தில் 140 மி.மீ மழை பொழிந்துள்ளது
மழை இன்னும் ஒரு மணி நேரம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் இடைவெளி இருக்கும். அடுத்த சில மணிநேரங்களில் கடலோரப் பகுதிகளிலிருந்து கடைசி மேகங்கள் நகர்ந்தபிறகு அப்பகுதிகளிலும், நகரின் உட்புறப் பகுதிகளிலிருந்து மேகங்கள் நகர்ந்தபிறகு அப்பகுதிகளிலும் படிப்படியாக மழை குறையும்” என தெரிவித்திருக்கிறார்.