சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை - களத்தில் இறங்கிய நந்தம்பாக்கம் காவல்நிலையம்

சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை - களத்தில் இறங்கிய நந்தம்பாக்கம் காவல்நிலையம்
சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை - களத்தில் இறங்கிய நந்தம்பாக்கம் காவல்நிலையம்
Published on

5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடத்துவதற்காக ஒரு காவல் நிலையமே களத்தில் இறங்கிய சம்பவம் அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னையில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மகள் கவிஷ்கா (5). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரின் வீட்டருகே நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் செந்தில் குமார் குடி வந்துள்ளார். செந்திலோடு மிக அன்பாக பழகிய கவிஷ்கா காலப்போக்கில் அவருக்கு மிக நெருக்கமான குழந்தையாக ஆகியிருக்கிறாள்.

 இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் கவிஷ்காவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்காக 5 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். ஆனால் கார்த்திக்கால் அந்த நேரத்தில் அவ்வளவு பணத்தை திரட்ட முடிய வில்லை. இந்த விஷயம் தலைமை காவலர் செந்தில் குமாருக்குத் தெரிய வர, தன்னால் முடிந்த 30,000 பணத்தை திரட்டிக்கொடுத்துள்ளார்.

மேலும் குழந்தைப் பற்றி காவல் ஆய்வாளர் தங்கராஜிடமும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் காவல்நிலையத்தைச் சேர்ந்த அனைவரும் இணைந்து இறுதியாக 65,000 பணத்தை திரட்டி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளனர். முதல்வரின் காப்பிட்டுத் திட்டத்தில் இருந்து 1 லட்சம் வழங்கப்பட்டது. மீதிப் பணத்தை ஜில் கேர் என்ற தனியார் அமைப்பு மீதப் பணத்தை கொடுத்து உதவியுள்ளது.

இதனையடுத்து சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் சிறுமி கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com