உலக டிராஃபிக் சிக்னல் தினம்: இதய வடிவில் ஒளிரும் சென்னை சிக்னல்கள்!

உலக டிராஃபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு சென்னையின் பல்வேறு சாலை சந்திப்புகளில் சிவப்பு விளக்கு இதய வடிவத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் ஒளிரவிடப்பட்டுள்ளது.
டிராஃபிக் சிக்னல்
டிராஃபிக் சிக்னல்புதிய தலைமுறை
Published on

இன்றைய தினம் உலக டிராஃபிக் சிக்னல் தினம் என்பதால், சென்னையின் பல்வேறு சாலை சந்திப்புகளில் டிராஃபிக் சிக்னல்களிலுள்ள வட்ட வடிவ சிவப்பு விளக்குகளில் வித்தியாசமாக ஒரு விஷயம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வட்ட வடிவிலான விளக்குக்கு பதிலாக, இதய வடிவிலான சிவப்பு விளக்கு ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் துறையினர் இதனை செயல்படுத்தி வருகின்றனர்.

Traffic signal
Traffic signalபுதிய தலைமுறை

1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்கா ஓஹியோ மகாணம், Cleveland பகுதியில் உலகில் முதல் முதலாக டிராஃபிக் சிக்னல் ஏற்படுத்தப்பட்டு செயல்முறைப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னரேவும் உலகின் பல்வேறு பகுதிகளில் டிராஃபிக் சிக்னல்கள் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

என்றபோதிலும், 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நிறுவப்பட்ட டிராஃபிக் சிக்னலை அதிகாரப்பூர்வமானதாக உள்ளது. இதனால் அந்நாளே உலக சிக்னல் தினமாக அறிவிக்கப்பட்டு உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசார் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சென்னை போக்குவரத்து காவல்துறை "உலக டிராஃபிக் தினத்தை" முன்னிட்டு அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா சிக்னல், புகாரி ஜங்ஷன், அண்ணா சிலை ஜங்ஷன், பெரியார் சிலை ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளின் வட்ட வடிவ சிவப்பு விளக்குக்கு பதிலாக இதய வடிவிலான சிவப்பு விளக்கினை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகள் இதய வடிவ சிவப்பு விளக்கு குறித்து என்னவென கேட்கையில் அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com