எல்லாக் காய்ச்சலும் டெங்கு அல்ல: நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை விளக்கம்

எல்லாக் காய்ச்சலும் டெங்கு அல்ல: நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை விளக்கம்
எல்லாக் காய்ச்சலும் டெங்கு அல்ல: நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை விளக்கம்
Published on

எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல என்றும், ஏடிஸ் கொசுவால் உண்டாகும் காய்ச்சல் மட்டுமே டெங்கு என்றும் நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு சேர்க்கப்படாததால், தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதாரத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சல் ஏற்கனவே சேர்க்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல என்றும், ஏடிஸ் கொசுவால் உண்டாகும் காய்ச்சல் மட்டுமே டெங்கு என்றும் விளக்கப்பட்டுள்ளது. இந்த கொசுக்களை கட்டுப்படுத்த ரூ.13.95 கோடியில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெங்குவை கண்டறிய 125 சோதனை மையங்களும், அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேர டெங்கு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com