தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு கடந்தாண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பணிகளை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மற்றும் மாநில அமைச்சர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “ சுகாதார துறையில் தமிழ் நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மருத்துவ சேவை அளிப்பதே தமிழக அரசின் தொலைநோக்கு திட்டம் 2023 இன் குறிக்கோள். தொற்று மற்றும் தொற்றா நோய்கள் தடுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மகப்பேறு திட்டங்கள் மற்றும் குழந்தைகள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
இத்தகையை செயல்பாடினால் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ‘சுகாதாரமான மாநிலம் முற்போக்கு இந்தியா’ அறிக்கையில் தமிழ்நாடு முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. தேசிய அளவில் குழந்தை இறப்பு விகிதம் 34 ஆக உள்ளது.ஆனால் தமிழ்நாட்டில் 2010ல் 24 ஆக இருந்த குழந்தை இறப்பு 2016-17ல் 17 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்மார்கள் பேறு காலத்தில் இறப்பு இந்திய அளவில் 130 ஆக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 2010ல் 90 ஆக இருந்த தாய்மார்களின் பேறுகால இறப்பு 66 ஆக குறைந்துள்ளது. மேலும் 2016-17ல் இது 62 ஆக குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சபை சுகாதாரம் குறித்து வகுத்துள்ள நிலையான இலக்குகளில் 2030 ஆம் ஆண்டிற்குள் தாய்மார்களின் பேறு காலத்தில் இறப்பு விகிதத்தை 67ஆக குறைக்க இலக்கு நிர்ணியக்கப்பட்டது. இந்த இலக்கினை தமிழ்நாடு 2016 ஆண்டே அடந்து தமிழகம் மத்திய அரசின் விருதையும் பெற்றுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் குடும்ப நல திட்டத்தில் முழுகவனம் செலுத்தப்பட்டது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தாய் சேய் நல திட்டங்கள் தருவது, 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒவ்வோரு வட்டாரத்திலும் ஏற்படுத்துதல், போதுதுமான இரத்த வங்கிமையங்களை ஏற்படுத்துதல், இரவு நேரங்களில் மகப்பெறு பிரசவம் வசதி செய்தல், ஒருங்கிணைந்த மகப்பெறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகச்சை பிரிவை மேம்படுத்துதல், நாடுதழுவிய தடுப்பு ஊசி திட்டம், தேசிய சுகாதார குறியீடுகள் அடையும் திட்டம் போன்ற முன்னோடி திட்டங்களை தமிழ் நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழக அரசு சுகாதார துறையில் சிறந்து விளங்குகிறது.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, தாய்மார்களின் மகப்பேறுக்காக உள்ள டாக்டர் முத்துலட்சுமி ரேட்டி திட்டத்தில் அளிக்கப்பட்டு வந்த நிதியுதவி 15000 லிருந்து 18000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 51.03 லட்ச தாய்மார்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும் இறந்தவர்களின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சுகாதாரத் துறையில் சிறந்து செயல்பாட்டிற்கு தமிழக அரசு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது” என்றார்.