கழிப்பறை கட்டுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாணவி ரமாதேவி விருதுநகர் மாவட்டத்தின் சுகாதார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேது நாராயணபுரத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ரமாதேவி பெற்றோரை கட்டாயப்படுத்தி வீட்டில் கழிப்பறை கட்ட வைத்தார். மேலும் கழிப்பறை கட்டுவதன் முக்கியத்துவம் குறித்தும் தனது கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மாணவியின் இத்தகைய செயலை பாராட்டும் விதமாகவும், தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவி ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு குறித்தும் புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து மாணவி ரமாதேவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் சிவஞானம், அவரை அந்த மாவட்டத்தின் சுகாதார தூதுவராக நியமித்துள்ளார். மாணவி ரமாதேவியை போல் அனைவரும் முன்வந்து கழிப்பறை கட்டுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.