TopNews | விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை; நியூசிலாந்து வெற்றி... சில முக்கியச் செய்திகள்!

TopNews | விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை; நியூசிலாந்து வெற்றி... சில முக்கியச் செய்திகள்!
TopNews | விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை; நியூசிலாந்து வெற்றி... சில முக்கியச் செய்திகள்!
Published on

பிகில் பட சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் இரவு முழுவதும் சோதனை. படத் தயாரிப்பாளர், பைனான்ஸியரின் வீடுகள், அலுவலகங்களில் 25 கோடி ரூபாய் சிக்கியதாகத் தகவல்

டி.என்.பி.எஸ்.சி-யைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடா? என சந்தேகம். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி ஜெயக்குமாரை தேடி வெளிமாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ரஜினி தெரிவித்த கருத்து பற்றி அரசியல் தலைவர்கள் முரண்பட்ட கருத்து. மாணவர்கள் போராட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் பேசுவது புதிதல்ல என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி. அரசு மருத்துவமனைகளில் 7 பேர் மட்டும் தனி வார்டில் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி அறிவிப்பு. "ஸ்ரீ ராம ஜென்மபூமி" என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்

டெல்லி தேர்தல், இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி என அமித் ஷா பேச்சு. தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் எனவும் பரப்புரையின்போது நம்பிக்கை

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com