“அவரும் ஒரு அறியப்படாத தமிழர்தான்” - தொ.பரமசிவன் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்

“அவரும் ஒரு அறியப்படாத தமிழர்தான்” - தொ.பரமசிவன் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்
“அவரும் ஒரு அறியப்படாத தமிழர்தான்” - தொ.பரமசிவன் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்
Published on

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன்(70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.

இவரது இறப்பு குறித்து கவிஞர் வைரமுத்து கூறும்போது, “ அவர் வரலாற்று ஆய்வாளர் மட்டுமல்ல பண்பாட்டு ஆய்வாளர். சுவடுகளை தொகுத்து சேர்த்தவர். அவரின் இழப்பு தமிழ் ஆராய்ச்சி உலத்திற்கு மட்டுமல்லாது தமிழ் பண்பாட்டு உலகத்திற்கும் பேரிழப்பு. எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. அறியப்படாத தமிழகம் என அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அவரும் கூட அறியப்படாத தமிழர்தான்.வாழ்கிறபோது தமிழ் அறிஞர்கள , பண்பாட்டு போராளிகளும் தமிழர்களால் போதுமான அளவு கொண்டாடப்படுவதில்லை. அவரது இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு" என்றார். 

தமிழில் இயங்கிவந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராக தொ.பரமசிவன் திகழ்ந்து வந்தார். அத்துடன் தமிழ் பண்பாட்டின் வேர்களை தனது நூல்கள் மூலமும் எடுத்துரைத்தும் வந்தார். அழகர் கோயில், அறியப்படாத தமிழகம் போன்ற நூல்கள் தொ.பரமசிவத்தின் முக்கிய படைப்புகளாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com