ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கலில் 1 லட்சத்து 8 ஆயிரம் வடைகளை கொண்டு ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அதிகாலை முதலே தொடங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு, வரிசையில் நின்று அனுமனை பக்திப்பெருக்குடன் வழிபட்டனர். முன்னதாக நாமக்கலில் உள்ள ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஸ்ரீஆஞ்சநேயருக்கு, கடந்த 4 நாட்களாக 13 லட்ச ரூபாய் செலவில் வடை மாலை தயாரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 1 லட்சத்து 8 ஆயிரம் வடைகள் கொண்ட சிறப்பு வடை மாலை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது.
தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர். மேலும், தமிழகத்தில் உள்ள
அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.