நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரியிருந்த நிலையில், அரசுத்தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் விசாரணை ஜூலை16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே மன்னிப்பு கோரப்பட்டது என்றும், தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஹெச்.ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தந்தை பெரியார் திராவிட கழக வழக்கறிஞர் கண்ணன், தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்குமாறு கோரினார்.
இதுகுறித்து தகவல்பெற்று தெரிவிக்க அரசுத்தரப்பு அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திருமயம் கீழமை நீதிமன்றம் ஜுலை 27ஆம் தேதி ஆஜராகுமாறு ஹெச்.ராஜாவுக்கு சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.