“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”-  குருமூர்த்தி 

“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”-  குருமூர்த்தி 
“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”-  குருமூர்த்தி 
Published on

தனியார் மருத்துவமனையில் 10ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு தொடர்பான கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. அதில் ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், ''பெண்ணிற்கும், பெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது. பெண்மை இல்லாத பெண்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். பெண்மை உள்ள பெண்கள் தான் தெய்வம். அவர்கள் தெய்வம் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால் எல்லா பெண்களையும் தெய்வம் என்று சொல்லமாட்டேன். அப்படி விஞ்ஞானப்படி ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் கொடுக்கவில்லை. முக்கியமானது என்னவென்றால், பெண்மையை நாம் இழந்து வருகிறோம். அது தான் அபாயகரமானது. 

பெண்ணை உருவாக்க முடியாது. ஆனால் பெண்மையை உருவாக்க முடியும். பெண்மையை பெண்ணில் மட்டுமே உருவாக்க முடியும். ஒரு பெண்ணால் ஒரு வீரனை உருவாக்க முடியும். ஒரு அறிவாளியை உருவாக்க முடியும். ஒரு மருத்துவனை உருவாக்க முடியும். ஆனால் ஒரு பெண்மையை உருவாக்க பெண்ணால் மட்டுமே முடியாது. சூழ்நிலை அவசியம். 

நம் நாட்டின் பொருளாதாரம் தொடந்து உயர காரணம் நம் குடும்பம். அதன் மையமாகவுள்ள பெண். அவர்களுடைய மையக்கருத்தான பெண்மை. என்னைப் பொறுத்தவரை, நான் அனுபவப்பட்டது, இந்திய பெண்கள் இணையற்றவர்கள். பெண்மை உள்ள பெண்கள் 30 சதவிகிதமாக இருக்கிறார்கள் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com