புதுக்கோட்டை: 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் தலையிலிருந்த குண்டு அகற்றம்

புதுக்கோட்டை: 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் தலையிலிருந்த குண்டு அகற்றம்
புதுக்கோட்டை: 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் தலையிலிருந்த குண்டு அகற்றம்
Published on

புதுக்கோட்டையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்திலிருந்து குண்டு பாய்ந்து சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில், 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பயிற்சி மையத்திலிருந்து வெளியேறும் துப்பாக்கி குண்டுகள் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் அவ்வப்போது விழும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொத்தமங்கலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் புகழேந்தி, அரையாண்டு விடுமுறைக்காக பசுமலைப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுவன் உணவு அருந்திக்கொண்டிருந்தபோது வீட்டின் கூரையை துளைத்த குண்டு சிறுவனின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கிக் குண்டு சிறுவனின் மூளைக்குள் சென்று பக்கவாட்டில் இருப்பதாக கூறி, அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்ற தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவன் தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சிறுவனின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com